ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு புதிய பிரதேச செயலாளராக வி.தவராஜா கடமைகளை பொறுப்பேற்றார் - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு புதிய பிரதேச செயலாளராக வி.தவராஜா கடமைகளை பொறுப்பேற்றார்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக வி.தவராஜா இன்று (16) திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி நிஹாரா மௌஜூத் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில், அந்த வெற்றிடத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் பதில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய நிலையில், புதிய பிரதேச செயலாளராக வி.தவராஜா இன்று திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய பிரதேச செயலாளரை வரவேற்கும் ஒன்றுகூடல் செயலக கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் பதில் செயலாளராகக் கடமையாற்றிய ஏ.சி.அப்கர் அஹமட் புதிய பிரதேச செயலாளரிடம் கடமைகளை ஒப்படைத்தார்.

புதிய பிரதேச செயலாளராகக் கடமையேற்றுள்ள வி.தவராஜா கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில், இன்று பிரதேச செயலாளராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad