Jeyendra Habeeshan |
தென்மராட்சிப் பகுதியில் 25 பயனாளிகளுக்கு கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் ஊடாக உங்களுக்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளின் கீழ் வீட்டுத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே / 298, ஜே / 297, ஜே / 294, ஜே / 293, ஜே / 288, ஜே / 289, ஜே / 292 மற்றும் ஜே / 310 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு காசேலை வழங்கி வைக்கப்பட்டதுடன், வீட்டிற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.
அடிக்கல்லினை கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் அங்கஜனின் செயலாளருமான சதாசிவம் இராமநாதன் நாட்டி வைத்தார்.
மேலும் நிகழ்வில் தென்மராட்சி பிரதேச சபை உறுப்பினர் தி.தங்கவேலு, தென்மராட்சிப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தென்மராட்சியில் உள்ள ஏனைய வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கான காசோலைகள் 26 ஆம், 28 ஆம் திகதிகளில் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த வீட்டுத் திட்டமானது தங்களால் சொந்தமாக வீட்டினை நிர்மாணிக்க முடியாத கிராமத்திற்கு ஓர் பயனாளி வீதம் தெரிவு செய்யப்பட்டு வழங் கப்படுகிறது .
No comments:
Post a Comment