வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவி விலகினார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவி விலகினார்

வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைக்கும், யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் கடிதம் மூலம் பதவி விலகலை அறிவித்துள்ளதாக த. ஐங்கரன் தெரிவித்துள்ளார். 

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் தான் அந்தப் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று தங்கவேலாயுதம் ஐங்கரன் மேலும் தெரிவித்துள்ளார். 

கரவெட்டி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை நேற்று காலை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்துக்கு அழைத்து கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா கலந்துரையாடியிருந்தார். 

கரவெட்டி பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் உறுதியாகத் தெரிவித்தனர். 

எனினும் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து உறுப்பினர்களிடம் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் வலியுறுத்தினார். 

வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்றதன் பின்னர் ஒரு மாதத்தில் பதவி விலகுவதாக கட்சித் தலைவரிடம் கூறியிருந்த தங்கவேலாயுதம் ஐங்கரன் நேற்று மாலை தனது முடிவை மாற்றினார்.

No comments:

Post a Comment