ஊரடங்கு வேளையில், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ரீதியில், வாரத்தில் இரு நாட்களில் முற்பகல் 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இவ்வாறு மருந்தகங்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டம்
ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள்
கொழும்பு மாவட்டம்
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள்
களுத்துறை மாவட்டம்
ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள்
குருநாகல் மாவட்டம்
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள்
No comments:
Post a Comment