சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபதாவது சீர்திருத்தத்தை ஆதரித்தமை வேதனைக்குரியது - தவராசா கலையரசன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபதாவது சீர்திருத்தத்தை ஆதரித்தமை வேதனைக்குரியது - தவராசா கலையரசன்

இருபதாவது சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதனை மூவின மக்களும் எதிர்த்துள்ளனர். இந்த சீர்திருத்தத்தை சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து இருப்பது மன வேதனைக்குரிய விடயம். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இருபதாவது சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதனை மூவின மக்களும் எதிர்த்துள்ளனர் இந்த சீர்திருத்தத்தை சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து இருப்பது மன வேதனைக்குரிய விடயம். 

20ஆவது திருத்தம் என்பது நிறைவேற்று அதிகார நடைமுறையை பெற்றுக் கொடுக்கிறது இதன்மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவிழந்து செல்கின்றது. 19ஆவது சீர்திருத்தத்தில் இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவான நியாயமான பல செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவான ஒரு காரணியாக இருந்தது.

இருபதாவது சீர்திருத்த நடைமுறையில் எமது தமிழ் தேசிய தலைமைகள் நிதானமாக செயல்பட்டு இருக்கிறார்கள் 20ஆவது சீர்திருத்தத்தை எமது தலைவர்கள் யாரையும் துன்புறுத்தி செயற்பட வைக்கவில்லை இதனை இதற்கு முதலும் செய்ததில்லை இனிவரும் காலத்திலும் செய்யப்போவதுமில்லை. 

சீர்திருத்தத்தில் உள்ள பாதக சாதக தன்மைகளை எடுத்துரைக்கும் சக்தியாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் இருந்துள்ளது. முஸ்லிம் தலைவர்களை பொருத்தளவில் 18,19,20, சீர்திருத்தங்களை ஆதரித்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் சிறுபான்யினர். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களையும் தமிழர்களையும் சேர்த்து சிறுபான்மை இனம் என்று பேசி வந்தனர் அவ்வாறு பேசிய தமிழ் தேசிய தலைவர்களுக்கு 20ஆவது திருத்தத்தை ஆதரித்து சிறந்த ஒரு பதிலடி கொடுத்துள்ளனர். இனியாவது தமிழ் தேசிய தலைவர்கள் திருந்த வேண்டும்.

தமிழ் முஸ்லிம் உறவு விடயத்தில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்தில் இணைந்து கொண்டு சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களைப் போன்று எமது தமிழ் மக்களை நசுக்கி விடலாம் என்ற கனவினை மறந்துவிட வேண்டும் நமது மக்கள் விழிப்புடன் உள்ளனர் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment