பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 6 நாட்களுக்கு பின்னர் மீன்பிடி படகுகளில் இருந்த மீன்களின் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று (27) காலை ஆரம்பமானது.
இலங்கை கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் பங்களிப்புடன் சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பேருவளை துறைமுக முகாமையாளர் எட்மன் டயாமால் தெரிவித்தார்.
இலங்கை கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் கிருஷாந்த ரணவீர பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தார். கொள்வனவு செய்யப்படும் மீன்கள் 3 வகைகளாக பிரித்து நியாயமான விலைக்கு கொள்வனவு செய்யப்படன.
பேருவளை கொவிட்-19 தொற்று நிலை காரணமாக கடற்தொழில் சார்ந்த வர்த்தகர்கள் மீன்களை துறைமுகத்தில் இறக்கி விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment