சீனாவில் இருந்து வருபவர்களை சுட்டு தள்ளுமாறு வட கொரியா ஜனாதிபதி உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Saturday, September 12, 2020

சீனாவில் இருந்து வருபவர்களை சுட்டு தள்ளுமாறு வட கொரியா ஜனாதிபதி உத்தரவு

சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு
கொரோனா பரவலை தடுக்க சீனாவில் இருந்து வட கொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில் இருந்து வட கொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக, தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார்.

உலகமே கொரோனாவால் நடுங்கிக் கொண்டிருக்க, வட கொரியா மட்டும், கொரோனா பாதிப்பு குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடுவது இல்லை.

இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படைத் தளபதி ராபர்ட் அம்ரம்ஸ், கொரோனா பரவலை தொடர்ந்து ஜனவரி மாதம் சீனாவுடனான எல்லையை வட கொரியா மூடியது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் அவசர நிலையையும் வட கொரியா அமுல்படுத்தியது. அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து வட கொரியாவுக்கு நுழைபவர்களை சுட வட கொரியா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்து வட கொரிய அரசு ஊடகம் தரப்பில் எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. வட கொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில் கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad