காயமடைந்த நிலையில் கரையொதுங்கிய ஆமை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 12, 2020

காயமடைந்த நிலையில் கரையொதுங்கிய ஆமை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆமை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வில்பத்து தேசிய பூங்காவை அண்மித்த கடற்கரையோரத்தில் காயமடைந்த நிலையில் கரையொதுங்கிய Green Sea Turtle (Chelonia Mydas) எனும் வகை இனத்தைச் சேர்ந்த ஆமை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நேற்று (11) புத்தளம் முள்ளிக்குளம் வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ஆமையின் கீழ் தாடையில் பலத்த காயங்கள் காணப்பட்டதாகவும், அதனையடுத்து முள்ளிக்குளம் வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சுமார் இரண்டு மணித்தியாலயங்களுக்கும் கூடுதலான நேரம் சிகிச்சை அளித்துள்ள போதிலும் அந்த ஆமை இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கல் ஆமை, இறைச்சி ஆமை மற்றும் மணல் ஆமை என பல பெயர்களில் அழைக்கப்படும் Green Sea Turtle (Chelonia Mydas) இனத்தைச் சேர்ந்த குறித்த ஆமை இலங்கையைச் சுற்றியுள்ள கடல்களில் வசிக்கும் ஐந்து பொதுவான ஆமைகளில் ஒன்றாகும் என சொல்லப்படுகிறது.

இந்த ஆமை மேலே இருந்து பார்க்கும்போது இதய வடிவத்தை ஒத்திருக்கிறது. இந்த இனத்தில் மற்ற ஆமைகளைப் போல வளைந்த கொக்கு இல்லை மற்றும் பெண் ஆமையை விட ஆண் ஆமை சற்று சிறியது எனவும், இந்த வகை ஆமை ஆண்டு முழுவதும் முட்டையிடுகிறது எனவும் கூறப்படுகிறது.

பொதுவாக ஒரு கூட்டில் சுமார் 100 இற்கும் 175 முட்டைகள் இடும். மற்ற ஆமைகளைப் போலவே, அவை குஞ்சு பொறித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு குஞ்சு பொரிக்கின்றன.

இந்த ஆமைகள் வெப்பமண்டல கடல்களிலும், மணல் தீவுகளிலும் அதிகம் காணப்படுகின்றன. விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் மிகவும் பாதுகாக்கப்பட்ட ஊர்வன இனமாக இந்த ஆமை பாதுகாக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் நிருபர் ரஸ்மின்

No comments:

Post a Comment