கிளிநொச்சியில் 77 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு - சந்தேக நபர்களுக்கு பொலிசார் வலைவீச்சு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

கிளிநொச்சியில் 77 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு - சந்தேக நபர்களுக்கு பொலிசார் வலைவீச்சு

கிளிநொச்சி பொலிசாரால் 77 கிலோ 300 கிராம் எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

கிளிநொச்சி பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கு அமைவாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி ஊடாக வேறு பகுதிகளிற்கு கடத்தப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பதிலேயே பொலிசார் சுற்றவளைப்பினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 77 கிலோ, 300 கிராம் கஞ்சா, இரண்டு கையடக்க தொலைபேசிகள், படகு மற்றும் 40 குதிரைவலு கொண்ட இயந்திரம் ஆகியன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுற்றன. 

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில் சான்று பொருட்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment