கோப் குழு தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

கோப் குழு தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் நியமனம்

அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (CoPE) தலைவராக பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி பேராசிரியர் சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டுளளார்.

கோப் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (22) பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றபோதே இவ்வாறு அவர் குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த முறை எதிரணிக்கு இவ்வாறு தலைமைத்துவம் வழங்கப்பட்ட நிலையில் எதிரணி எம்.பி ஒருவரை நியமிக்க எதிரணி தரப்பில் கோரப்பட்டபோதிலும், சரித்த ஹேரத் எம்.பியின் பெயரை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்மொழிய இராஜங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அவரை வழிமொழிந்ததைத் தொடர்ந்து அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இதற்கு எதிரணி சார்பில் ஆட்சேபனை எதுவும் முன்வைக்கப்படவில்லை.

இதற்கு முன்னர் சஜித் பிரேமதாஸ குறித்த பதவியை எதிரணிக்கு வழங்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (CoPE) 22 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

No comments:

Post a Comment