அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் அவர்களின் அனுமதியின்றி பிடித்தம் செய்தமை குறித்த பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பலர் முறைப்பாடு செய்துள்ளனர் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக உடகம தெரிவித்துள்ளார்
தங்களின் அனுமதியின்றி தங்களின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளமை குறித்து எங்களிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள அவர் குறிப்பாக அரச துறை அதிகாரிகள் குறித்து எங்களிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார்.
மாகாணமட்டத்தில் உள்ள அதிகாரிகள் அரசாங்க ஊழியர்களை கொவிட் 19 நிதியத்திற்கு நிதி உதவி வழங்குமாறு கோருவது குறித்த பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கல்வித்துறை அதிகாரிகள் குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் அனுமதியின்றி சம்பளத்தில் பிடித்தம் செய்தமை குறித்த முறைப்பாடுகள் உறுதியானால் இது குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்களின் அனுமதியின்றி அவர்களின் சம்பளங்களில் குறைப்பு இடம்பெற்றால், சம்பளங்களை வழங்குமாறு ஊழியர்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக மிரட்டப்பட்டிருந்தால் அது குறித்து ஆராய்வதற்கான அதிகாரம் எங்களிற்குள்ளது என தீபிக உடகம தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பல தொழிற்சங்கங்கள் இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment