தேர்தல் திகதி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? - News View

About Us

About Us

Breaking

Sunday, May 24, 2020

தேர்தல் திகதி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்?

உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் வெளியான பின்னரே பொதுத் தேர்தல் திகதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சண்டே மோர்னிங்கிற்கு இதனை தெரிவித்துள்ள அவர் நீதிமன்றத்தின் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் முடிவடையும் வரை தேர்தல் ஆணைக்குழு காத்திருக்கும் என தெரிவித்துள்ளார்

அதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தேர்தல் செயலகத்தின் உறுப்பினர்கள் உட்பட அனைவருடனும் கலந்தாலோசனைகளை மேற்கொண்ட பின்னர் திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு சார்பாக உச்ச நீதிமன்றத்தின் முன்னிலையில் கடந்த வாரம் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலியபீரிஸ் ஜூன் 20ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என தெரிவித்திருந்தார்.

சுகாதார அதிகாரிகள் தேர்தலை நடத்தலாம் என சமிக்ஞை காண்பித்தால் பத்து வாரங்களில் தேர்தலை நடத்தலாம் என அவர் குறிப்பிட்டிருநதார்.

No comments:

Post a Comment