(நா.தனுஜா)
அரசியல் நலன் நோக்கங்களை ஒதுக்கி தேசிய ரீதியான கொள்கைத்திட்டம் மற்றும் செயற்பாடு ஆகியவற்றின் ஊடாகவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல முடியும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது இப்போது ஒட்டு மொத்த இலங்கையர்களினதும் ஒரேயொரு இலக்கு, கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் சவாலை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டு வருவதொன்றேயாகும்.
தற்போதைய சூழ்நிலை மக்களனைவரும் ஒருமித்து ஓரணியில் திரள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது.
அரசியல் நலன் நோக்கங்களை ஒதுக்கி தேசிய கொள்கைத்திட்டம் மற்றும் செயற்பாடு என்பவற்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் நாம் அடுத்தகட்டத்திற்குச் செல்ல முடியும்.
No comments:
Post a Comment