கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு : குற்றம்சாட்டுகிறார் மங்கள - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 28, 2020

கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு : குற்றம்சாட்டுகிறார் மங்கள

(நா.தனுஜா) 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியிருக்கிறார். 

இது குறித்து ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் தத்தமது அரசியல் தேவைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிலேயே வெகுவாகக் கவனம் செலுத்தியது என்றும் அவர் சாடியிருக்கிறார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது, 

கொவிட் - 19 கொரோனா வைரஸ் நபர்களுக்கு இடையிலான தொடர்புகள் மூலம் மிக வேகமாகப் பரவுகின்றது. ஆகவே தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்காக பரிசோதனைகள் மேற்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த வேளையில், கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் தத்தமது அரசியல் தேவைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிலேயே வெகுவாகக் கவனம் செலுத்தியிருந்தனர். 

உண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளம் காணும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் அளவு எமது நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதொன்றே மிக முக்கிய தேவையாகும்.

No comments:

Post a Comment