ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே சவால்களை வெற்றி கொள்ள முடியும் - சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 28, 2020

ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே சவால்களை வெற்றி கொள்ள முடியும் - சுசில் பிரேமஜயந்த

(இராஜதுரை ஹஷான்) 

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வைரஸ் பரவல் குறைவான மட்டத்தில் காணப்படுகின்றது. 

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே சவால்களை வெற்றி கொள்ள முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து உரிய பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையினை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்துள்ளது.

அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு அரசாங்கம் தற்போது செயற்படவில்லை. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். 

No comments:

Post a Comment