இந்தியாவின் இந்தோரில் பொதுமக்களால் தாக்கப்பட்ட மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி தங்களின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மருத்துவர் ஜாகியா சயட் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் பொதுமக்களின் கல்வீச்சிற்கும் தாக்குதலிற்கும் உட்பட்ட நிலையிலும் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களை இனம் காண்பதற்கான பணியில் நாங்கள் கடந்த நான்கு நாட்களாக ஈடுபட்டிருந்தோம் என தெரிவித்துள்ள மருத்துவர் ஜகியா சயட் நாங்கள் நேற்று சந்தித்தது போன்ற ஆபத்தை ஒரு போதும் சந்திக்கவில்லை, நாங்கள் கல்வீச்சிற்கும் தாக்குதலிற்கும் இலக்காகி காயமடைந்தோம், ஆனால் நாங்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளோம் நாங்கள் அச்சமடையப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் கடந்த சில நாட்களாக மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம், கொரோனா வைரசினால் பாதிக்கப்பட் நபருடன் தொடர்பிலிருந்த ஒருவருடன் நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தவேளை பொதுமக்கள் சீற்றமடைந்து எங்களை கற்களால் தாக்க தொடங்கினார்கள் என கல்வீச்சிற்கு இலக்கான மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இவ்வாறான சம்பவங்கள் பல இந்தியாவில் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசாங்கம் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசாங்கங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment