மத்திய கிழக்கில் பணி புரியும் இலங்கையர்களில் தாயகம் வர விரும்புவோரை அழைத்து வர நடவடிக்கை எடுங்கள் - ஜனாதிபதியிடம் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் - News View

About Us

Add+Banner

Wednesday, April 29, 2020

demo-image

மத்திய கிழக்கில் பணி புரியும் இலங்கையர்களில் தாயகம் வர விரும்புவோரை அழைத்து வர நடவடிக்கை எடுங்கள் - ஜனாதிபதியிடம் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள்

46778400_1142645589247633_3760674889090990080_n
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களில் நமது நாட்டுக்கு வர விரும்புவோரை அழைத்துவர அவசர நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளனர். 

நிறுவனங்களிலும் வியாபார நிலையங்களிலும் தொழில் புரிவோர், அந்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தமது இருப்பிடங்களில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் அவர்களுக்கு உரிய சம்பளமும் கிடைப்பதில்லை. 

அத்துடன், பலர் தொழிலை இழந்தும் இருக்கின்றனர். இதனால் அன்றாட வாழ்வுக்கே அவர்கள் கஷ்டப்பட்டு வருவதோடு, இலங்கையில் தமது குடும்பத்தாருக்கு பணம் அனுப்ப முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

கொஞ்சநஞ்ச பண வசதி உள்ளவர்கள் கூட, இலங்கைக்கு அதனை அனுப்ப முடியாது திண்டாடுகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையிலும் தமக்குத் தெரிந்தவர்களின் உதவியைப் பெறமுடியாத நிலையிலும் திண்டாடுகின்றனர்.

நமது நாட்டின் அந்நியச் செலாவணியில் பெரும்பங்கை மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் ஈட்டித் தருகின்றனர். அந்த நாடுகளில் சுமார் 12 இலட்சம் இலங்கைப் பணியாளர்கள் தொழில் புரிகின்றனர். வருடாவருடம் இலங்கைக்கு அவர்களினால் 7 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணி கிடைக்கின்றது.

இந்த நிலையில் இவர்களின் விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக வேனும் தொழில்களைப் பெற்றுக் கொடுத்து அவர்களுக்கு உதவ வேண்டும். 

தனித் தொழில் செய்யக் கூடியவர்களுக்கு வட்டியற்ற கடனை பெறும் வகையில் முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் மாற்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Form

Name

Email *

Message *