ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன ஒன்றிணைந்தே தேர்தலில் களமிறங்கும் - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன ஒன்றிணைந்தே தேர்தலில் களமிறங்கும் - ரோஹித அபேகுணவர்தன

(இராஐதுரை ஹஷான்) 

ஐக்கிய தேசிய கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் ஒன்றாக இணைந்தே பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை தற்போது இரகசியமாக முன்னெடுக்கின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கான நடவடிக்கை இரு தரப்பினரும் இரகசியமாக முன்னெடுக்கின்றார்கள். 

கொரோனா வைரஸ் பரவலடையும் முன்னதாக இருந்தே இவர்கள் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முரணான கருத்துக்களை குறிப்பிட்டார்கள். 

தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொதுத் தேர்தலுக்கு எதிரான இவர்களது விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டதன் பின்னர் பொதுத் தேர்தல் பாதுகாப்பான முறையில் நடத்தப்படும். பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தையே மக்கள் மீண்டும் தெரிவு செய்வார்கள் என்றார்.

No comments:

Post a Comment