தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்கது - முன்னாள் சபாநாயகர் கரு - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்கது - முன்னாள் சபாநாயகர் கரு

(நா.தனுஜா) 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிவதற்கான பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதில் தாமதமாகவேனும் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமென்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார். 

கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களை கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிப்பது மிகவும் அவசியமென வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. 

இது குறித்து முன்னாள் சபாநாயகர் மேலும் கூறியிருப்பதாவது எமது நாட்டிற்குள் கொரோனா வைரஸ் சமூகப்பரவல் நிலை ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. 

எனவே பரிசோதனைகள் மேற்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்பதுடன், ஏற்கனவே தாமதமாகவேனும் தற்போது தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும். 

அதேபோன்று நாட்டை மீளத்திறக்கும் போது மிகவும் கவனமாக செயற்பட வேண்டுமென்பதுடன், அத்தியாவசிய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான செயற்திட்டமொன்றைத் தயாரித்துக் கொள்வதும் அவசியமாகும்.

No comments:

Post a Comment