(செ.தேன்மொழி)
மத்திய வங்கி பிணைமுறிகள் மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவும் கைது செய்யப்பட வேண்டும் என்பதே எமது எண்ணமாகும்.
அது மாத்திரமின்றி இந்த மோசடிகளுடன் வேறு எவராவது பங்கு கொண்டுள்ளாரா?, இதன்போது மோசடி செய்யப்பட்டுள்ள பணத்திற்கு என்ன நடந்துள்ளது?, இந்த சொத்துகளை மீளப் பெறுவது எவ்வாறு என்பது தொடர்பிலும் ஆராய்ந்துப் பார்த்து, மோசடிச் செய்யப்பட்ட சொத்துக்களை மீளம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த மோசடிகள் தொடர்பான தடயவியல் அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்பன வெளியிடப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பான விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று பலரும் தெரிவித்து வந்தனர்.
இவற்றை ஆதாரமாக கொண்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனைகளை பெற்றுக் கொடுக்குமாறும் சட்டமா திணைகளத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் கூறுனார்.
No comments:
Post a Comment