கொரோனா பரவலை தடுக்க ஈரானில் 300,000 சுகாதார ஊழியர்கள் கடமையில்! - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

கொரோனா பரவலை தடுக்க ஈரானில் 300,000 சுகாதார ஊழியர்கள் கடமையில்!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஈரானில் 300,000 சுகாதார ஊழியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு நாடு தழுவிய ரீதியில் செயற்படுவதாக ஈரான் சுகாதார அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக ஈரானின் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கையானது வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.

அங்கு 2300 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 77 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதேவேளை ஈரான் நகரமான கோமிலிருந்து வெளியேற முயற்சிக்கும் மக்கள் சிலருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளமையினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கோமின் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கொரோனா பரவலை சமாளிக்க ஒரு வைத்தியசாலையை உருவாக்கி வருவதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment