கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்படுவதை தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்துவதாக பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் நான் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆலோசனை வழங்குவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஸ் பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருடன் கிறிஸ் விட்டி நெருக்கமாக இணைந்து பணியாற்றியிருந்தார்.
கொரோனா வைரஸ் நெருக்கடியின் பின்னர் அவர் பிரதமருடன் ஒன்றாக செய்தியாளர் மாநாடுகளில் தோன்றினார்.
No comments:
Post a Comment