(ஆர்.விதுஷா)
சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான சந்தேகநபர்ளை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இது தேர்தலை மையமாக கொண்டு தன்மீது மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல் எனக்கூறினார்.
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன், பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட 12 சந்தேக நபர்களை கைது செய்யும் உத்தரவை பெறுமாறு சட்டமா அதிபரினால் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாணாயக்க இவ்வாறாக கருத்தை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னராக இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கலாகும். நான் நிதியமைச்சராக கடமையாற்றிய காலத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் எனக்கு கீழ் ஒரு வங்கியும் இருக்கவில்லை மத்திய வங்கியும் இருக்கவில்லை. இந்நிலையில் எவ்வாறு இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இது தேர்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினையாகும். இது எமது கட்சிக்கும் எனக்கும் எதிராக செய்யும் அரசில் சதியாகும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment