பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகளின் நியமணங்கள், சேவை இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படும் பிரதேசங்கள் குறித்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பெப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியராட்சி அமைச்சின் செயலாளர்களுக்கு கடிதம் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் காலத்தில் அர அதிகாரிகள் நியமணம், இடமாற்றம், மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றை வழங்குவதல் முற்றிலும் தவறானதாகும்.
களுத்துறை, அநுராதபுரம், குருநாகலை மற்றும் பொலனறுவை ஆகிய பகுதிகளில் தேர்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பல அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றன. அத்துடன் தேர்தல் காலத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் சுயாதீனமான தேர்தல் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை கேள்விக்குறியாக்கும். அத்துடன் தேர்தலை சுயாதீனமான முறையில் நடத்துவதற்கும் தாக்கம் செலுத்தும்.
ஆகவே இவ்வாறன செயற்பாடுகளை முழுமையாக தவிர்த்துக் கொள்ள தொடர்புடையவர்களுக்கு பணிப்புரை விடுக்குமாறு வலியுறுத்துகின்றேன் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment