கொரோனாவால் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்ததென்ன? - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்ததென்ன?

எனக்கு தலைவலி, இருமல் என்பன காணப்பட்டன. மேற்கொள்ளப்பட்ட மருத்­துவ பரிசோதனைகளின் போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்­ளாகியிருப்பது கண்டறியப்பட்டது என்று கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கத்துக்கு உள்­ளாகியுள்ள இத்தாலி வாழ் இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் காணொளி உரையாடல் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்தக் காணொளி உரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில், பிறிதொருவரிடமிருந்து எனக்கு வைரஸ் தொற்றியதாகக் கூறினர். என்னை நன்றாக பரிசோதித்த பின்னர் எனக்கு தொற்று இருப்பதாக உறு­திப்படுப்படுத்தப்பட்டது.

ஹொரன, ஹந்தபாங்கொட எனது சொந்த இடமாகும். கடந்த ஞாயிற்றுக்­கிழமையே இது உறுதிப்படுத்தப்பட்­டது. கணவருக்கும் வந்து என்னைப் பார்ப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். என்னை தனி அறையில் வைத்திருக்­கிறார்கள். 

மருந்தொன்று வழங்கப்பட்டது. அது என்ன மருந்து என்பது எனக்குத் தெரியாது. அதன் பின்னர் ஒன்றும் வழங்கப்படவில்லை. நான் இத்தாலிக்கு வருகை தந்து 10 வருடங்களாகின்றன. உணவு உண்ணவில்லை என்றார்.

No comments:

Post a Comment