பாரிய மரக்கடத்தல் பொலிஸாரால் முறியடிப்பு - கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

பாரிய மரக்கடத்தல் பொலிஸாரால் முறியடிப்பு - கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிட்டம்

ஒட்டுசுட்டானில் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டு பாரிய மரக்கடத்தல் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் பேராறு காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முதிரை மரக்குற்றிகளைக் கடத்திச் சென்றுகொண்டிருந்த வாகனத்தைக் சோதனையிட முற்பட்டவேளை பொலிஸாரின் சைகையையும் மீறி தப்பிக்க முயற்சித்த வாகனத்தின் டயர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில் கடத்தலுக்காகப் பயன்படுத்திய வாகனம் மற்றும் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான 10 க்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment