ஹொங்கொங்கில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து சீனாவிலிருந்து செல்லப் பிராணிகளை இறக்குமதி செய்வதை உக்ரைன் தடை செய்துள்ளது.
கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் செல்லப் பிராணியான நாயின் மூக்கு மற்றும் வாய்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை சோதனை செய்ததில் நாவல் கொரோனா வைரஸ் "பலவீனமான நோய் தொற்று" (weak positive) இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஹொங்கொங்கின் வேளாண்மை, மீன் வள மற்றும் பாதுகாப்புத் துறை திணைக்களம் (AFCD) தெரிவித்துள்ளது.
இதுவே, கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான உலகின் முதல் செல்லப் பிராணி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நாய் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று குறித்து சாதகமான முடிவு வரும் வரை மீண்டும் மீண்டும் சோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு முன்னெச்சரிக்கையாக, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் செல்லப் பிராணிகளை 14 நாட்களுக்கு கால்நடை கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்த வேண்டும் என்று திணைக்களம் கடுமையாக அறிவுறுத்துகிறது.
"கொவிட்-19 நோய்க்கிருமியை உக்ரேனுக்கு பரப்புவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான மாநில சேவை, சீன மக்கள் குடியரசில் இருந்து 33 ஆவது பிரிவின் கீழ் செல்லப் பிராணிகளை (நாய்கள், பூனைகள் போன்றவை) மற்றும் மாமிசங்களை இறக்குமதி செய்வதை உக்ரைன் தற்காலிகமாக தடை செய்துள்ளது.
No comments:
Post a Comment