2200 கஞ்சா செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

2200 கஞ்சா செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த இருவர் கைது

தனமல்ல - அம்பேகமுவ பகுதியில் 2200 கஞ்சா செடிகள் மது வரித் திணைக்களத்தினால் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை மது வரித்திணைக்களத்தினால் கொழும்பில் 10 பேர் கொண்ட குழுவினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பயிரிடப்பட்ட 2200 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த கஞ்சா செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். கேரள கஞ்சா செடிகள் தென்படாத படி சோளச் செடிகளுக்குள்ளும் வாழை மரங்களுக்குள்ளும் மறைத்து பயிரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கஞ்சா கன்றுகளின் சந்தை பெறுமதி சுமார் 3 இலட்சத்திற்கு மேற்பட்டது எனத் மதுவரித் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பயிற்ச் செய்கைக்காக சுமார் 5 இலட்சம் ரூபா செலவு செய்ததாகவும் இன்னும் மூன்று மாதங்களில் அறுவடை செய்ய ஆயத்தமான நிலையிலிருந்ததாகவும் மது வரி திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, ஒருவரிடம் தலா 5 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் இரு நபர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment