உலக நாடுகளையே அச்சத்தில் அழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு நிதி உதவிகளை வழங்குவதங்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.
அந்த வகையில், பாதிக்கப்பட்ட நாடுகளிங்கு சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கவுள்ளதாக மேற்படி வங்கி அறிவித்துள்ளது.
மேலும், இத்தொகையில் பெரும் பகுதியை பாதிக்கப்பட்ட நாடுகளில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு ஒதுக்கலாமென தீர்மானித்துள்ளது.
வழங்கப்படும் இத்தொகை மூலம் கொரோ வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்துவதே இதன் நோக்கமென உலக வங்கி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment