நாட்டிலுள்ள வாய்க்கால்களையன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் பதவிக்கு வந்தோம் - பிரச்சினைகளினால் நாம் நாட்டைவிட்டு ஓடவில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, September 2, 2019

நாட்டிலுள்ள வாய்க்கால்களையன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் பதவிக்கு வந்தோம் - பிரச்சினைகளினால் நாம் நாட்டைவிட்டு ஓடவில்லை

பெரும் சவால்களை சந்திக்க நேர்ந்த போதும் நாட்டின் அபிவிருத்தியை நிறுத்தவில்லை. அதேவேளை சவால்களைக் கண்டு தப்பியோடவும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

நாட்டிலுள்ள வாய்க்கால்களையன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் பதவிக்கு வந்தோம் என்றார். 

குளியாப்பிட்டி தேர்தல் தொகுதியில் நாரங்கல்ல பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்வி பீடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் வாய்க்கால்களை நிர்மாணிப்பது தொடர்பில் சில தரப்பினர் இக்காலங்களில் பேசி வருகின்றனர். நான் வாய்க்கால்களை அமைப்பதற்கன்றி நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்குடனேயே செயற்படுகின்றேன். 

அதற்கிணங்க நாட்டை வாய்க்காலுக்குள் தள்ளிவிடுபவர்களுக்கு நாட்டைக் கையளிப்பதும் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் நாட்டைக் கட்டியெழுப்பும் தரப்பிற்கு நாட்டைக் கையளிப்பதும் மக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. 

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதானால் நாம் உழைக்க வேண்டும். அந்த வகையில் நாட்டைப் பலப்படுத்தி பெருமைக்குரிய நாட்டை உருவாக்குவதே எமது தேவையாகும். 2015ஆம் ஆண்டு நாம் இந்த அரசாங்கத்தைப் பாரமெடுத்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம்.

பிரச்சினைகளினால் நாம் நாட்டைவிட்டு ஓடவில்லை. கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமலேயே நாம் செயற்பட்டோம். குறைந்தளவு பெரும்பான்மையாவது எமக்கு இருக்கவில்லை. 

பெரும்பான்மையற்ற அரசாங்கமாக நாம் பல்வேறு சவால்களை கடந்த காலங்களில் எதிர்கொண்டோம். வெள்ளம், குப்பைமேடு சரிந்து விழுந்தமை, வரட்சி, மண் சரிவு போன்றவற்றோடு உள்ளூராட்சி சபைத்தேர்தலிலும் தோல்வியுற நேர்ந்தது. 

ஒக்டோபர் 26 அரசியலமைப்பு சூழ்ச்சி இடம்பெற்று அரசாங்கம் எம்மிடமிருந்து கைநழுவிப் போனது. இந்த அனைத்து சவால்களின் போதும் நாட்டின் அபிவிருத்தியை நிறுத்தவில்லை. சவால்களைக் கண்டு நாம் தப்பியோடவும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமாக பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தோம் என்றார். 

No comments:

Post a Comment