மீண்டும் மலரப்போகின்ற எமது ஆட்சியில் புதிய அரசமைப்பு ஏதோவொரு வழியில் நிறைவேற்றப்படும் - News View

About Us

About Us

Breaking

Monday, September 2, 2019

மீண்டும் மலரப்போகின்ற எமது ஆட்சியில் புதிய அரசமைப்பு ஏதோவொரு வழியில் நிறைவேற்றப்படும்

"தற்போதைய நிலைமையில் புதிய அரசமைப்பை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் சாதகமான நிலைமை இல்லை. இந்த நிலைமைக்கு ரணில் அரசே முழுப்பொறுப்பு. மீண்டும் மலரப்போகின்ற எமது ஆட்சியில் புதிய அரசமைப்பு ஏதோவொரு வழியில் நிறைவேற்றப்படும். இது உறுதி."

இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 

புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படாமைக்கு நாடாளுமன்றமே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்துக் குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பில் மஹிந்தவிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது "ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியன முடிந்த பின்னர் புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். 

தற்போதைய நிலைமையில் புதிய அரசமைப்பை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் சாதகமான நிலைமை இல்லை. இந்த நிலைமைக்கு ரணில் அரசே முழுப்பொறுப்பு. 

எமது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வை அனைத்துத் தரப்புக்களுடன் பேச்சு நடத்தி, அதன் ஊடாக புதிய அரசமைப்பை உருவாக்கிப் பெற்றுக் கொடுப்போம். நாட்டுக்குப் பங்கம் ஏற்படாத தீர்வையே வழங்குவோம்" - என்றார்.

No comments:

Post a Comment