நாடளாவிய சேவைகளைச் சேர்ந்த அனைத்து உத்தியோகத்தர்களையும் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்திற்கமைய சேவை பிரமாணக் குறிப்புகள் திருத்தப்பட்டு வருகின்றன.
நாடளாவிய சேவைகளுக்கான நியமன அதிகாரி என்ற வகையில் அரசாங்க சேவை ஆணைக்குழு திருத்தப்பட்ட சேவை பிரமாணக் குறிப்புக்களை அதிவிசேட வர்த்தமானி மூலம் பிரசுரித்து வருகிறது.
பொது நிருவாக அமைச்சின் கீழ் உள்ள இலங்கை நிருவாக சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை கட்டிடக் கலைஞர் சேவை, இலங்கை விஞ்ஞான சேவை, இலங்கை பொறியியல் சேவைகளுக்கான திருத்தப்பட்ட சேவை பிரமாணக் குறிப்புக்கள் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைச்சரவை தீர்மானம் மூலம் நாடளாவிய சேவைகளான 13 வகையான சேவைகளின் சேவை பிரமாணக் குறிப்புக்களை திருத்தி ஒரே வகையான பதவி உயர்வுக் கொள்கைகளை பின்பற்றத் தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்திற்கமைய நாடளாவிய சேவைக்கு முதல் நியமனம் பெற்று ஆறு வருட திருப்திகரமான சேவைக்குப் பின்னர் அச்சேவையின் இரண்டாம் தரத்திற்கும், இரண்டாம் தரத்தில் ஆறுவருட திருப்திகரமான சேவைக்கு பின்னர் அச்சேவையின் முதலாம் தரத்திற்கும் பதவி உயர்வு வெற்றிட, அங்கீகரிக்கப்பட்ட ஆளணி என்பவற்றை கவனத்திற்கொள்ளாது வழங்கப்பட அமைச்சரவை தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
(சாய்ந்தமருது குறூப் நிருபர்)
No comments:
Post a Comment