மேல் மாகாண சபையின் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (02) திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், பிரதம செயலாளர் பிரதீப் யசரத்ன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண அரச சேவைகள் ஆணைக் குழு உறுப்பினர்கள் உட்பட மாகாண அமைச்சு செயலாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்வர்.
மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களை சேர்ப்பதற்காக இவ்வருடத்தில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment