காத்தான்குடி நகர சபை உறுப்பினர் முபீன் இராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 3, 2019

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் முபீன் இராஜினாமா

சுழற்சி முறையில் நகர சபையில் உறுப்பினர்களை நியமிக்கும் நோக்கில் காத்தான்குடி நகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் போட்டிஈட்டிய அடுத்து வரும் உறுப்பினர்களை நியமிக்கும் வகையில் நகர சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் தனது பதவியை இன்று இராஜினாமா செய்தார். 

அது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் என்னுடைய சுயவிருப்பத்தின் பேரில் தேசியத் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களினுடைய ஆலோசனைக்கு அமைவாக நான் வகித்து வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவியினை இன்று (03) செயற்படும் வண்ணம் இராஜினாமா செய்து கொள்வதாக நேற்றைய தினம் (02) மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளேன்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் வரையிலும் நான் நகர சபை உறுப்பினராக செயற்பட ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் மாகாண சபைத் தேர்தலுக்கான காலம் இழுத்தடிப்புச் செய்யப்படுவதன் காரணமாகவே இந்த முடிவினை நான் எடுத்துள்ளேன்.

நகர சபை உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் எனக்கு சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கிய தேசியத் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நயீமுல்லாஹ், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் சக உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அரசியல் ரீதியான பதவி இல்லாவிட்டாலும் இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்தும் என்னுடைய மக்கள் பணி தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

யு.எல்.எம்.என்.முபீன்,
தேசிய கொள்கை பரப்புச்செயலாளர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

No comments:

Post a Comment