எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல்கள் ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
காலி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சோமரத்ன விதானபத்திரணவினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியினால் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யபட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த சபைக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பிலான தீர்ப்பு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது.
அதற்கமைய எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை உடனடியான நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, நிராகரிக்கப்பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற நீதியசர்களான பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெனாண்டோ ஆகியோரினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment