பொதுஜன பெரமுன கூட்டணிக்கான யாப்பு - இன்று இறுதி முடிவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 3, 2019

பொதுஜன பெரமுன கூட்டணிக்கான யாப்பு - இன்று இறுதி முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணிக்கான யாப்பு தொடர்பில் இன்று இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் உருவாகவுள்ள புதிய கூட்டணிக்காக சிறிய கட்சிகள் சிலவும் ஒன்றிணையவுள்ளன. 

மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உருமய உட்பட சில கட்சிகள் புதிய கூட்டணியில் இணைந்துகொள்ளவுள்ளன. 

புதிய கூட்டமைப்பின் நிர்வாகம் நிறைவேற்று சபைக்கு வழங்கப்படுவதுடன், கூட்டமைப்பின் தலைமைத்துவம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்கவுள்ளதாகவும் செயலாளர் பதவியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. 

கூட்டணியின் யாப்பு தொடர்பிலான உடன்படிக்கை தொடர்பில் இன்று (03) இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்பன்பில எம்.பி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment