இலங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேகா காலமானார். இறக்கும் போது அவருக்கு 86 வயது ஆகும்.
கல்வி மற்றும் அரசியல் துறைகளில் செயற்பாட்டாளரான இவர், களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவின் பீடாதிபதியாகவும் செயற்பட்டு வந்தார்.
1933 ஆம் ஆண்டு மார்ச் 04 ஆம் திகதி பிறந்த கார்லோ பொன்சேகா, கடந்த 2012 ஜனவரி முதல் 2017 ஜூன் வரையான காலப் பகுதியில் இலங்கை மருத்துவ சபையின் (Sri Lanka Medical Council) தலைவராக செயற்பட்டார்.
நீர்கொழும்பு, மேரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மற்றும் கொழும்பு ஜோசப் கல்லூரிகளில் தனது ஆரம்ப கல்வியை பயின்ற கார்லோ பொன்சேகா, 1955 இல் கொழும்பு மருத்துவ பல்கலையில் (University of Ceylon) இணைந்த அவர், 1960 இல் முதல் தர (1st Class) மருத்துவ பட்டத்தை பெற்றார்.
அதன் பின்னர் 1964 இல் இங்கிலாந்தின் எடின்பேர்க் பல்கலையில் உடற்கூற்று மருத்துவ பட்டத்தை நிறைவு செய்த அவர், 1966 இல் கலாநிதி பட்டத்தை நிறைவு செய்தார்.
அரசியல் ரீதியாக அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் செயற்பாட்டாளராக செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment