2016ஆம் வருட 6ஆம் இலக்க இலங்கை நுண்கடன் சட்டத்தை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்குப் பதிலாக கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையொன்று எற்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் நுகர்வோர் பாதுகாக்கப்படுவதுடன் நுண்கடன் நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டமாக மாற்றப்படும் என்று நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அனுதிபெற்ற கடன் வழங்குநர்கள், அனுமதி பெற்ற நுண்கடன் நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களின் ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், சமுர்த்தி சமூக அபிவிருத்தி வங்கிகள் மற்றும் விவசாய அபிவிருத்தி சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணித்தல் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் நோக்கமாகும்.
இதேவேளை, இலங்கை நுண் கடன் சட்டம் இலங்கை மத்திய வங்கியினால் முறையாக ஒழுங்குபடுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment