இலங்கை கிரிக்கட், பெட்டி
கெம்பஸ் மற்றும் ஹிரா பவுன்டேஷன் உள்ளிட்ட ஒன்பது அரச நிறுவனங்களை கோப் குழு விசாரணைகளுக்காக அழைத்துள்ளது.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள கோப் அமர்வில் இந்த நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் நாளைய தினம் கோப் குழு முன்னிலையில் ஆஜராகவிருக்கும் அதேநேரம், பெட்டி கெம்பஸ் மற்றும் ஹிரா பவுன்டேஷன் ஆகிய நிறுவனங்கள் செப்டெம்பர் 17ஆம் திகதி ஆஜராகவுள்ளன.
இவை தவிரவும் தேசிய சேமிப்பு வங்கி, மக்கள் வங்கி ஆகியன எதிர்வரும் 4ஆம் 5ஆம் திகதிகளில் அழைக்கப்பட்டுள்ளன. அணுசக்தி அதிகார சபை செப்டெம்பர் 18ஆம் திகதியும், புவியியல் ஆய்வு மற்றும் அகழ்வு பணியகம் செப்டெம்பர் 19ஆம் திகதியும் அழைக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு அமர்வு ஊடகங்களுக்கு திறக்கப்பட்டுள்ளது போன்று கோப் விசாரணைகளுக்கும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தெரிந்ததே.
No comments:
Post a Comment