சுதந்திரக் கட்சியின் அடையாளத்தை விட்டுக் கொடுப்பதற்குத் தயாராகவில்லை - ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, September 2, 2019

சுதந்திரக் கட்சியின் அடையாளத்தை விட்டுக் கொடுப்பதற்குத் தயாராகவில்லை - ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நேர்மையை பலவீனமாக எவரும் கருதக்கூடாது என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார். 

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

ரணில் விக்கிரமசிங்க தலைமைதாங்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கோ, சஜித் பிரேமதாச தலைமைதாங்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கோ அல்லது கரு ஜயசூரிய தலைமைதாங்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கோ நாம் ஆதரவு வழங்கப்போவதில்லை. 

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவது என்ற நோக்கத்திலேயே பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. கட்சிக்கு பல்வேறு சவால்கள் இருக்கின்றன. இந்த சவால்களை முறியடித்து பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதையே விரும்புவதாகவும் அவர் கூறினார்.

எதுவாக இருந்தாலும் கட்சியின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே கூட்டணி அமைக்கப்படும். சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சின்னம் தொடர்பான விடயத்துக்கு தீர்வு காணப்பட்டால் 90 வீதமான பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டுவிடலாம். 

சுதந்திரக் கட்சியின் அடையாளத்தை விட்டுக் கொடுப்பதற்குத் தயாராகவில்லை. சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு இன்றி எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெற முடியாது என்பதை சகலரும் உணர்ந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment