சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வியாங்கொடை வரை புதிய புகையிரதப் பாதையை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை பிரதேச செயலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் கொழும்பிற்கு பயணிக்காமல், புகையிரதத்தில் வியாங்கொடை ஊடாக கண்டி, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட இடங்களுக்கு பயணிக்க முடியும் என, அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய புகையிரத பாதை அமைப்பதற்கான வாய்ப்பு தொடர்பில் புகையிரத திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment