போக்குவரத்து அமைச்சின் கீழ் செயற்படும் அரச நிறுவனமான லக்திவ பொறியியல் நிறுவனத்தின் கீழ் மாதாந்தம் 20 பஸ்களை தயாரிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இந்த நிறுவனம் கடந்த 8 மாத காலத்தில் 35 மில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பழைய பஸ்களை புதிதாக உருவாக்கும் லக்திவ பொறியியல் நிறுவனத்தின் கீழ் புகை பரிசோதனை மேற்கொள்ளும் மத்திய நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இதனூடாக சகல இ.போ.ச பஸ்களுக்கும் புகை பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் போது இந்நிறுவனத்தின் மீளாய்வு குறித்தும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
மூடப்படும் நிலையில் இருந்த லக்திக நிறுவனத்தை குறுகிய காலத்தினுள் முன்னேற்ற முடிந்துள்ளது. முன்பு மாதாந்தம் 7 பஸ்கள் தான் இங்கு உருவாக்கப்பட்டன. அதனை 15 ஆக அதிகரித்துள்ளேன். இதனை 20 ஆக அதிகரிப்பதே எனது இலக்காகும்.
இந்த நிறுவனத்தின் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க இருக்கிறோம். ஜப்பான் வாகனங்களை திருத்தும் நிலையமொன்றையும் இங்கு ஆரம்பிக்க உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment