கல்கிஸ்ஸையில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை, சில்வெஸ்டர் வீதியில் நேற்று (02) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதை தொடர்ந்து, இடம்பெற்ற தகராறில் இருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் இரத்மலானையைச் சேர்ந்த 34 வயதுடைய டயஸ் ரத்வத்தை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, இது தொடர்பாக விரிவான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment