ராஜபக்சக்கள் எமக்குத் தூசி, அவர்கள் தோற்பது நிச்சயம்! - ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் ரணில் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 3, 2019

ராஜபக்சக்கள் எமக்குத் தூசி, அவர்கள் தோற்பது நிச்சயம்! - ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் ரணில் தெரிவிப்பு

"ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் கோட்டாபய ராஜபக்சதான் போட்டியிடுவார் என்று உறுதியாகக் கூறமுடியாது. ஏனெனில் அவருக்கு எதிராக சட்டச் சிக்கல்கள் வந்தால் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து இன்னொருவர் களமிறங்கக்கூடும். எமக்கு எதிராக எவர் களமிறங்கினாலும் தோற்பது உறுதி. ஏனெனில் ராஜபக்ச குடும்பம் எமக்குச் சவால் அல்ல."

இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலைதீவு புறப்பட முன்னர் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருடன் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். 

"இந்த நாட்டில் கொலைகார கலாசாரத்தை அரங்கேற்றிய ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கின்றார்கள். ஆனால், அவர்களைத் தேர்தலில் நாம் தோற்கடிப்போம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்களை நாம் படுதோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும்" என்று பிரதமர் மேலும் தெரிவித்தார் என குறித்த அமைச்சர் கூறினார். 

charles ariyakumar jaseeharan

No comments:

Post a Comment