தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகையை 500 ரூபாவாவிலிருந்து 750 ரூபா வரை 50 வீதத்தினால் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் எதிர்கால நடவடிக்கையின் பொருட்டு வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிக்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த யோசனைக்கே, அமைச்சரவை இன்று (03) அனுமதியளித்துள்ளது.
இந்த உதவித்தொகை தரம் 6 முதல் க.பொ.த. உயர்தரம் வரையான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சுதந்திர கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வுதவித்தொகை வழங்கப்படுகின்றது.
தற்போது வருடமொன்றுக்கு உதவித்தொகை பெறும் சுமார் 130,000 மாணவர்களுக்கான உதவித்தொகை இதன் மூலம் 50% ஆக அதிகரிக்கும்.
இதற்கென மாதமொன்றிற்கு தலா ரூபா 500 விகிதம் வருடமொன்றிற்கு அரசாங்கம் ரூபா 610 மில்லியனை செலவிடுவதோடு, வருடாந்தம் மேலும் 365 மில்லியனை ஒதுக்கி இலவசக் கல்விக்கான உரிமையை மேலும் உறுதி செய்யும் வகையில், இவ்வுதவித்தொகையை ரூபா 750 ஆக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment