வனாத்தவில்லு, கல்லடி ஏரியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
வழமையான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், கல்லடி ஏரியில் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்த குறித்த மீனவர்களைக் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி மற்றும் பல்லியவாசலபாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயது முதல் 38 வயது வரையான மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த கடற்படையினர், இவர்களிடமிருந்து 07 சட்டவிரோத மீன்பிடி வலைகளையும் 07 டிங்கி படகுகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள உபகரணங்களுடன், கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்பிடித் திணைக்கள பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment