எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியினால் எல்பிட்டிய பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட பெயர்ப்பட்டியல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக்கட்சியின் செயலாளர் தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்ப்பை அறிவித்த போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment