மாகாண சபைக்கு அதிகாரங்களைத் தரக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது அவசியம் - முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Friday, August 30, 2019

மாகாண சபைக்கு அதிகாரங்களைத் தரக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது அவசியம் - முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட்

இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இல்லை. எனவே ஜனாதிபதித் தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாகாண சபைக்கு அதிகாரங்களை தரக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது அவசியமாகும்”

இவ்வாறு தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட்.

இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது மாகாண சபைத் தேர்தல் முறைமையானது தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த முறைமைக்கு 2017ஆம் ஆண்டு மாற்றப்பட்டிருந்தது. 

புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் தொகுதிகள் பிரிக்கப்பட்டு எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும். அது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தபோதும் அது நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர் எல்லை நிர்ணயம் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் பழைய மற்றும் புதிய முறைமைகளில் தேர்தலை நடத்த முடியாத நிலைமை உள்ளது.

மாகாண சபைத் தேர்தலை சட்டத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதன் மூலமே நடத்த முடியும். அந்தச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை நடாளுமன்றம் எப்போது மேற்கொள்ளும் என்பது கேள்விக்குரியதே. 

இந்நிலையில் எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தல் குறித்து சிறுபான்மை கட்சிகள் கவனம் கொண்டு செயற்பட வேண்டும். குறிப்பாக மாகாண சபைக்குரிய சகல அதிகாரங்களையும் வழங்க
முன்வருபவரும் - அதனை உத்தரவாதப்படுத்துவதற்கு உறுதியளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவிரும்புபவருமான வேட்பாளார் யார் என்பதை அறிந்து அவருக்கு ஆதரவளிப்பதன் மூலமாக இதனை நாம் சாத்தியப்படுத்திக்கொள்ள முன் வரவேண்டும்.

எனவே கடந்த காலங்களைப் போன்று வெறும் வார்த்தைகள் மூலமான உத்தரவாதங்களை நம்பி ஏமாந்துவிடாது. காத்திரமான உறுதியான நிலைப்பாடுகளை எடுத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் மக்களும் செயற்படவேண்டும் – என்றார்.

No comments:

Post a Comment