மட்டக்களப்பில் உடன் அமுலாகும் வகையில் நீர் வெட்டு - பிரதேசம் மற்றும் மணித்தியாலங்களும் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 1, 2019

மட்டக்களப்பில் உடன் அமுலாகும் வகையில் நீர் வெட்டு - பிரதேசம் மற்றும் மணித்தியாலங்களும் அறிவிப்பு

வரட்சியான காலநிலை நிலவுவதனால், மட்டக்களப்பு பிராந்தியத்திற்கு பிரதானமாக குடிநீரை வழங்கும் உன்னிச்சைக் குளத்தினது நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதோடு, இன்னும் ஒரு மாதத்திற்கு விநியோகிக்க தேவையான நீரே காணப்படுவதாகவும், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் இன்று (01) தெரிவித்தார்.

இதன் காரணமாக, மறு அறிவித்தல் வரை பின்வரும் நீர் விநியோகத் திட்டங்களில் உடன் அமுலாகும் வகையில் நீர் வெட்டு குறிப்பிட்ட மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

வவுணதீவு நீர் வழங்கல் திட்டத்தில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை, இரவு 10.00 மணி தொடக்கம் காலை 04.00 மணி வரை

செங்கலடி மற்றும் வாழைச்சேனை பகுதியில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை, இரவு 10.00 மணி தொடக்கம் காலை 05.00 மணி வரை

ஏறாவூரில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை, இரவு 11.00 மணி தொடக்கம் காலை 05.00 மணி வரை

ஆரையம்பதியில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை, இரவு 10.00 மணி தொடக்கம் காலை 05.00 மணி வரை,

காத்தான்குடியில் காலை 09.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை, இரவு 10.00 மணி தொடக்கம் காலை 04.00 மணி வரை

கல்லடியில் காலை 09.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரை, இரவு 10.00 மணி தொடக்கம் காலை 06.00 மணி வரை

இருதயபுரத்தில் காலை 08.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை, இரவு 10.00 மணி தொடக்கம் காலை 04.00 மணி வரை தினமும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, களுவாஞ்சிக்குடி, மண்டூர் மற்றும் கல்லாறு போன்ற நீர் விநியோகத் திட்டங்களில் மேற்படி நீர் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும், நீர் வெட்டு அமுலாகும் நீர் வழங்கல் திட்டங்களிலுள்ள பாவனையாளர்கள் நீரினை சேமித்து விரையமின்றி பாவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வ.சக்திவேல்

No comments:

Post a Comment