நல்லூரில் சோதனை நிலையங்கள் அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 3, 2019

நல்லூரில் சோதனை நிலையங்கள் அமைப்பு

யாழ். நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் ஆலயத்திற்கு வரும் பக்தர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய, அதற்கான சோதனைக் கூடங்களை யாழ்ப்பாணம் மாநகரசபை அமைத்து வழங்கியுள்ளது.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் என்று பொலிஸார் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சோதனை நடவடிக்கைக்காக சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைக்கப்பட்ட சோதனைக் கூடங்களை மாநகர முதல்வர், ஆணையாளர் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.

ஆலயத்திற்கான 04 நுழைவாயில்களிலும் தலா இரு சோதனைக் கூடங்கள் படி அமைக்கப்பட்டுள்ளன என்பதோடு, இச்சோதனைக் கூடங்களை அமைப்பதற்காக மாநகர சபைக்கு 03 இலட்சம் ரூபா வரை செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய் நிருபர் - செல்வகுமார்

No comments:

Post a Comment